அன்பின் கருணா,
என்ன சாதித்தாய்... ஒரு மாபெரும் விடுதலை போராட்டத்தை காட்டி கொடுத்து என்ன சாதித்தாய்..
தமிழிழ புதிய விடுதலை புலிகள் என்று ஒரு அமைப்பினை தொடங்கினாய..இலங்கை இராணுவத்துடன் சேர்ந்துகொண்டு விடுதலை புலிகளை எதிர்த்து போராடினாய்..உன்னால் கிழக்கு பகுதியில் சிங்கள குடியேற்றம் பெருமளவில் நடந்தது.
லண்டனுக்கு போலி கடவுச்சீட்டில் பயணம் செய்தாய்...ஆறு மாதம் லண்டன் சிறை வாசம்..
நீ செய்த எட்டப்பன் வேலை உனக்கு கிடைத்தது என்ன ஒரு எம்.பி பதவி...கேவலம் இந்த பதவிக்காக ஒரு மாபெரும் விடுதலை போராட்டத்தை பின்ண்டைய செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது..உன்னையே நம்பி வந்த இளைஞர்கள் இன்று அரபு நாடுகளில் கூலி வேலை செய்ய நீ மட்டும் கொழம்பு நகரில் ஆடம்பரமாக வாழ்கிறாய்..
எத்துனையோ எட்டப்பன்களை தமிழீழ விடுதலை போராட்டம் பார்த்துவிட்டது.
அதில் நீயும் ஒன்று....