Sunday, July 31, 2005

வீட்டோட(மாமனார்) மாப்பிள்ளையாக இருக்கலாமா..?

வீட்டோட(மாமனார்) மாப்பிள்ளையாக இருக்கலாமா..?இந்த தலைப்புப்பற்றி பேசுவதே அவமானம் என்று சிலர் நினைக்கிறார்கள்...என்னைபொருத்தவரை பெற்றோரை இழந்தவர்கள்,பெற்றவர்கள் வேறு ஊரில் இன்னொரு மகனோடு இருப்பவர்கள்,மாமனார் வீட்டோடு இருப்பதில் எந்த தவறும் இல்லை..வேலை இல்லாமல் மாமனார் வீட்டில் விருந்து சாப்பாடு சாப்பிடுவதுதான் அவமானமே தவிர சம்பளத்தில் சாப்பாட்டுக்கு என்று கொடுத்துவிட்டு சாப்பிடுவதில் தவறில்லை.சொல்லப்போனால் இலாபம்தான்...இப்பொழுதெல்லாம் முன்புபோல அதிக மகன்களோ அல்லது மகள்களோ இல்லாததல் இது மிகவும் வசதியாக உள்ளது...அதே நேரத்தில் மாமனார் வீட்டில் இருந்தாலும் அவர்கள் மகன் போல அவர்கள் வீட்டு வேலைகளை செய்ய தயங்ககூடாது...அதேப்போல் மாலை வீட்டுக்குவந்தவுடன் நேராக உங்கள் அறைக்கு செல்லக்கூடாது..கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசவேண்டும்....கல்யாணம் மற்ற் நிகழ்ச்சிகளுக்கு மாமனார் மாமியாரை நீங்கள் உங்கள் வாகனத்தில் அழைத்துச்செல்லவேண்டும்...மேற்சொன்னவகளை நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் மரியாதைக்கும் அளவே இல்லை....எல்லாம் மாமனார் வீட்ல ரெண்டு வருஷம் இருந்த அனுபவம்தான்!!!!...அன்புடன்அரவிந்தன்

Tuesday, July 26, 2005

ஆன்மிகவாதி(வியாதி) ரஜினிப்பற்றி சாரு....விளாசல்

ஆன்மிகவாதி(வியாதி) என்ற பெயரில் சரியான காரியவாதியாக இருக்கும் ரஜினிப்பற்றி எழுத்தாளர் சாரு தனது கோணல் பக்கங்களில் கிழிகிழியென்று கிழித்துயிருக்கிறார்..

www.charuonline.com.