Saturday, December 18, 2004

வணக்கம்!!!நன்பர் முகுந்த் திருமண வரவேற்பிற்க்கு கடந்த புதன் கிழமை காலை பெங்களுரிலிருந்து பேருந்து மூலம் புறப்பட்டேன்.எல்லா அரசு பேருந்துகளும் தற்போது டிவிடி மூலம் படம் காட்டுகிறார்கள்.காதலர் தினம் பார்த்துக்கொண்டே சேலம் சென்றடைந்தேன்.அங்கிருந்து இன்னொரு பேருந்துமூலம் நாமக்கல் சென்று அங்கிருந்து ஒரு தானி(அதாங்க ஆட்டோ)பிடித்து திருமண அரங்கிற்க்குள் நுழைந்தபோது மாலை மணி ஆறு..
முகம் கழுவி மாற்றுடையணிந்து வெளியெ வந்தேன்.அப்போது மற்ற சென்னை நன்பர்களும் வந்து சேர்ந்தனர்.(தமிழக முதலவரின் இல்லத்தில் கணினி ஆலோசகராக பணிபுரியும் நன்பரும் முகுந்தராஜின் தமிழா நிறுவனத்தை சென்னையில் நிர்வகித்து நன்பர் ஒருவரும்).முகுந்தின் தந்தை சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலம் போல.நல்ல கூட்டம்.மாலை 6.15 மணிக்கே சாப்பட்டுக்கூடம் களை கட்ட துவங்கியது...மணமக்களை பார்த்து வாழ்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்தபின் நாமக்கல் ராஜா தேடினோம்.கொஞ்சம் இள வயசா தெரிந்த வர்களிடமெல்லாம் சென்று நீங்கதானே ராஜா என்று கேட்டு அசடு வழிந்தோம்..
சரி கொஞ்சம் வயத்துபாட்டை கவனிப்போன்னு அங்கே போனா சரியான கூட்டம்...பின் வழியா எதாவது என்ட்ரி கொடுக்கலாம்னு பார்த்தா எல்லா வாசலிலும் கூட்டம்.சரின்னு நம்ம நன்பர் ஒரு "பிட்" போட்டார்.மாத்திரை போட தண்ணி வேணும் என்று சொல்லி நாங்க மூவரும் உள்ளே செல்ல வழி செய்தார்.உள்ளே சென்றவுடன் நாங்க உஷாரா மூனு சீட் பிடித்து விட்டோம்.சும்மா சொல்லக்கூடாது.மிகவும் நல்ல சாப்பாடு........தலை வாழை இலையில் ஒரு "புல்" கட்டு கட்டினோம்.அப்புறம் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன்....

Sunday, November 14, 2004

வணக்கம!!் பரிசோதனை?....இனிமே நிச்சயம் பரிசோதனை முயற்ச்சியெல்லாம் கிடையாது..தொடர்ந்து எழுதுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

அரவிந்தன்

Saturday, September 04, 2004

அன்பு நண்பர்களே!!!
நீண்ட நாட்களாகிறது....வேலை பளூ என்று அல்வா கொடுக்க விரும்பவில்லை.கொஞ்ச நாட்களாக வாசிப்பல் கவனம் செலுத்தினேன் எழுதுவதைவிட என்று ஸீன் போட விரும்பவில்லை....
அக்மார்க் சோம்பேறித்தனம்தான் காரணம்.இப்போத்தான் சோம்பல் முறிச்சு இருக்கேன்....
அரவிந்தன்

Sunday, March 28, 2004

பொதுவாக கால் சென்டர்களில் வேலைசெய்பவ்ருக்கு வெளியே இருந்து வரும் தனிப்பட்ட தொலைப்பேசி அழைப்புகளை கொடுக்கமாட்டார்கள்...வேலை கெட்டுவிடும் என்பதால்..

அதனால் பெரும்பான்மையினர் தங்கள் உபயோகத்திற்க்கு அலைப்பேசியைத்தான் பயன்படுத்துபர்..
அதுக்கூட வேலைநேரத்தில் பயன்படுத்த அனுமதியில்லை...இடைவேளைகளில் பயன்படுத்த அனுமதியுண்டு..
ஆனால் நம்மக்கள் கில்லாடிகள்...தங்கள் அலைபேசியினை சட்டைப்பைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு தொலைபேசியில் வாடிக்கையாளோரோடு பேசுவதுபோல பேசிக்கொண்டு இருப்பார்கள்...

ஆனால் ஒன்றும் மட்டும் எனக்கு புரியவில்லை..விடியற்காலை 4 மணிக்கு அப்படி யாரிடம்தான் பேசுவார்களோ
எங்களைப்போன்ற பெருசுகளுக்கு இது புரியாத புதிர்...

தொடரும்...
கால் சென்டர் என்பது ஒரு வித்தியாசமான இந்தியா இதுவரை சந்திராத புதிய இயங்குமுறை கொண்டு செயல்படும் இடம்..

எல்லாவிதமான உடைகளும் அணியலாம்..எல்லாவயதினரும் வேலை செய்யலாம்...கல்வித்தகுதி பள்ளியிருதி படிப்பு இருந்தாலே போதுமானது....ஆங்கிலம் பேச மட்டும் தெரிந்தாலே போது...கணினி கையாளத் தெரிந்தால் அதுமிக பெரிய தகுதியாகத் கருத்தப்படும்...

கைநிறைய சம்பளம் என்று சொல்லாவிட்டாலும் நல்ல சம்பளம்தான்...18 வயதினரும் 50 வயதினரும் ஒரே வேலையை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வார்கள்...

சில நேரத்தில் வாழ்ந்துகெட்ட சில பெருசுகள் வேலைக்கு வந்து இந்த சின்ன பையன்களிடம் கதை அளந்து கொண்டு இருக்கும்...
தொடரும்...

Tuesday, March 23, 2004

வாழ்க்கை ஓட்டத்தில் அடிப்பட்டு மிதிப்பட்டு ஒரு அழைப்பு மையத்தில் அதாஙக கால் சென்டரில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு கால் பாய் யின் கதை......
வணக்கம்
New Test message