Monday, November 26, 2007

சகரத்தை மீட்போம்

காவிரிக்குத் தெற்கேயுள்ளவர்கள் பொதுவாக சகரத்தை "ச" (cha) என்று சரியாகவே ஒலிப்பர்.

காவிரிக்கு வடக்கே அச் சகரம் ஸகரம்மகிச் சோறு (choru) என்பது ஸோறு என்றும், செல்வம்(Chelvam) என்பது ஸெல்வம்(selvam) ஏன்றும் திரிந்து ஒலிக்கும். சகரம் அவ்வாறு ஸகரமாவது தமிழ் எதிர்ப்பை தானறிந்த தன்வினையாகக்கொண்ட பார்பபானருக்கு எடுத்த கையாகியது.. அந்த ஸகரத்தை அவர்கள் வேண்டுமென்றே ஷகரமாக (sha)ஒலிக்கத் தலைப்பட்டுள்ளனர்.

நேற்று வரை அவாள் இவாள் எனப் பேசுவதன் வாயிலாகப் தாங்கள் இன்னாரெனக் காட்டிக்கொண்டனர். அந்த அவாள்,இவாள் சாதிநடை இன்று நகைப்பிற்குரியதாகப் போய்விட்டமையால்,இன்று சகரத்தை ஷகரமாக ஒலிப்பதன் வாயிலாக அவர்கள் தங்களின் சாதி அடையாளத்தைக் காட்டிக்கொள்கின்றனர்.

க-------ங
ச-------ஞ
ட-------ண
த--------ந
ப--------ம

ஆகிய தமிழ் உயிர்ர்மெய்யெழுத்துக்களீல்,க,ச,ட,த,ப முதலான வல்லின் உயிர்மெய் எழுத்துக்களை விரிவாக்கியதாலேயே வட மொழிகளில் ka,kha,ga,gha போன்ற வருக்க ஒலியன்கள் தோன்றின. அவற்றில் "ச" வரிசையில் சகரமே (cha)முதல் எழுத்தாகும்.இதுவே தமிழில் ஸகரம் முதல் எழுத்தாக வரமுடியாது என்பதைக் காட்டும்.தமிழில்,அச்சகரமே ஒரு சொல்லுக்கு இடையில் ஸகரமாக ஒலிக்குமேயின்றி,ஸகரம் முதல் எழுத்தாக வரவே வராது. சகரம் (cha) மட்டுமே முதல் எழுத்தாக வரும்.அதனாலேயே ஸகரம் முதலான வடவொலி எழுத்துக்கள் வடிக்கப்பட்டன.

சரியாக ஒலிப்பதன் வாயிலாகச் சகரத்தை மீட்பது தமிழைக் கண்ணெனப் பேணும் தமிழ்காப்பு வினையேயின்றி வேறில்லை.

கருத்து உதவி:பெங்களூர் அறிஞர் குணா அவர்கள்

அன்புடன்
அரவிந்தன்

2 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சாவி என்பதை ஸாவி என்றும்; சின்ன என்பதை ஸின்ன என்றும்; தேர்தல் சின்னம் என்பதை தேர்தல் ஸின்னம் என்றும்; சேறு என்பதை ஸேறு என்றும் சொல்லிக் கொல்கிறார்கள்.

Anonymous said...

அருமையான பதிவு. இப்படியாவது நமது இளய தலைமுறைக்கு வித்தியாசம் தெரிந்தால் சரி. இதை மற்றும் பலர் அறிய www.tamigg.comல் சேர்க்கவும்