Wednesday, November 07, 2007

சுடிதார் போட்ட பொண்னுங்களை குருவாயூர் கிருஷ்ணனுக்கு பிடிக்காதாம்.

சென்ற வாரம் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் தலைமை குருமார்கள் பிரசன்னம் பார்த்தார்களாம்( பிரசன்ன பார்ப்பதென்பது கடவுளிடம் நேரிடையாக பேசி அவரின் மனநிலையை அறிவது)

சென்ற வாரம் பிரசன்னம் பார்த்துவிட்டு வெளியே வந்த குருமார்கள் சொன்னார்களாம் பகவான் கிருஷ்ணன் மிகவும் கோபமாக இருக்கிறார்.எப்படி சாந்தம் செய்வதென்று தெரியவில்லை.

உடனே அங்கிருந்த மற்றவர்கள் எதற்க்காக கிருஷ்ண பகவான் கோபமாக இருக்கிறார் என்று கேட்டார்களாம்

முன்பெல்லாம் பெண்கள், கேரள முறைப்படி முண்டு சேலை கட்டிக்கொண்டு கோவிலினுள் வந்தார்கள்.ஆனால் சில பெண் அமைப்புகளின் போராட்டத்தால் சுடிதார் அணிந்து வர அனுமதி கொடுத்தோம்.அது பகவானுக்கு பிடிக்கவில்லை.அதனால்தான் கோபமாக இருக்கிறார் என்று தலைமை குருமார் சொன்னார்.அதனால் சுடிதார் அணிந்து வர தடைவிதிப்பது பற்றி தீவிரமாக யோசித்துவருவதாக தலைமை குருமார் தெரிவித்துள்ளார்.

முண்டு சேலை கட்டி வந்த பெண்களை இரசித்த பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு சுடிதார் மூலம் முழுவதும் மூடிக்கொண்டு வந்தால் கோபம் வராதா என்ன

பெண்யியம் பேசுபர்களே உங்கள் கருத்தென்ன

அன்புடன்
அரவிந்தன்

6 comments:

Anonymous said...

//பெண்ணியம் பேசுபர்களே உங்கள் கருத்தென்ன//

இதற்கு பெண்ணியம் பேசுபவர்கள்தான் என்று இல்லை அரவிந்தன். நடு நிலைமையாக இந்தக் கண்ணோட்டத்தை அணுகும் எவர் வேண்டுமானாலும் சொல்லலாம்.

இதையும் நம்பிக் கொண்டுத் திரிய ஒரு பெரிய்ய கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறதே என்பதைப் பார்க்கும் போதுதான் பற்றிக் கொண்டு வருகிறது.

பால்வெளி said...

நல்ல வேளை.. நான் முன்னாடியே பதிவு போட்டாச்சு..
வாசிக்க...
http://paalveli.blogspot.com/2007/11/blog-post.html

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குருவாயூர் கிருஸ்ணனுக்கு!
வயது போய்விட்டதோ????

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
This comment has been removed by the author.
Nimal said...

//முண்டு சேலை கட்டி வந்த பெண்களை இரசித்த பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு சுடிதார் மூலம் முழுவதும் மூடிக்கொண்டு வந்தால் கோபம் வராதா என்ன//

பின்னே... இரசனை என்பது மகா பகவானுக்கும் தானே... பகவானின் சார்பில் 'முழுவதும் மூடிக்கொண்டு' வருவதை அப்பட்டமாக எதிர்க்கிறோம்...

ஆனால் இது பகவானின் இரசனையா... குருமார்களின்...???

kiddy ppl said...

கேட்பதற்கு கேணயன்கள்
இருக்கும் வரைக்கும்
சொல்வதற்கு ஆட்கள்
இருப்பார்கள் தானே?